வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (00:46 IST)

ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் முத்தாலிக் மனு உச்ச நீதிமன்றத்தில்தள்ளுபடி

கோவா மாநிலத்துக்குள் செல்ல தடையை நீக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் முத்தாலிக் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
 

 
ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக், இந்து சமய பிரச்சாரங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார். மேலும், இந்து கலாச்சாரத்தைக் காப்போம் என்ற பெயரில் சர்ச்சைக்குரிய செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
 
இந்த நிலயைில், இவலர் சமீபத்தில் கோவா செல்ல திட்டமிட்டார். அவர் கோவா சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என மும்பை உயர் நீதி மன்ற கோவா கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இறுதி விசாரணையில்,  ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் முத்தாலிக், கோவா செல்ல நீதி மன்றம் தடை விதித்தது.
 
இதனையடுத்து, இந்த தடையை நீக்கக் கோரி, ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் முத்தாலிக் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அவரது மனுவை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது.
 
அப்போது நீதிபதிகள், நீங்கள் கோவா செல்வதை அனுமதிக்க முடியாது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.