வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 15 மே 2016 (10:17 IST)

ரூ. 90 கோடி மதிப்புள்ள விஜய் மல்லையாவின் சொகுசு பங்களா பறிமுதல்

விஜய் மல்லையாவின் ரூ. 90 கோடி மதிப்புள்ள கோவா பங்களாவை சிபிஐ பறிமுதல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 
நாட்டின் பல வங்கிகளில் கிங்பிஷர் நிறுவனத்தின் அதிபர் மல்லையா சுமார் 9000 கோடி வரை கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் கடனை திருப்பி செலுத்தத் தவறியதோடு தற்போது நாட்டை விட்டு வெளியேறி பிரிட்டனில் பதுங்கி உள்ளார்.
 
இந்நிலையில் மல்லையாவின் கடனுக்காக அந்நிறுவனத்தின் லோகோவை விற்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் அந்நிறுவனத்தின் லோகாவை வாங்க யாரும் முன் வரவில்லை. இந்நிலையில்
 
ரூ. 90 கோடி ஆடம்பர பங்களாவை பறிமுதல் செய்ய வடக்கு கோவா ஆட்சியர் நில மோகனன் அனுமதி வழங்கினார். அதைத்தொடர்ந்து அந்த பங்களாவை தற்போது கோவாவில் உள்ள விஜய் மல்லையாவின் விட்டை பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
 
இதனைத் தொடர்ந்து விஜய் மல்லையாவின் கடனுக்காக அவரது மற்ற சொத்துக்களை பறிமுதல் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்ற எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.