வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abi
Last Modified: சனி, 30 ஏப்ரல் 2016 (19:51 IST)

சத்யபாமா பல்கலைகழக மாணவர்கள் உருவாக்கிய செயற்கைகோள்: விண்ணில் பாய தயாரானது

சத்யபாமா பழ்கலைகழக மாணவர்கள் உருவாக்கிய செயற்கைகோள், ஜுன் மாதம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.


 

 
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), கடந்த 2009ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த 4 செயற்கோளை விண்ணில் அனுப்பியது.
 
மேலும், கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த 7 செயற்கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளது என்று அறிவித்த இஸ்ரோ, சென்னை சத்தியபாமா பல்கலைகழக  மாணவர்கள் வடிவமைத்த செயற்கோள் 2010 ஆம் விண்ணில் ஏவப்படும் என்று தெரிவித்து இருந்தது.
 
இந்நிலையில், செயற்கைகோள் வடிவமைக்கும் பணியில் கால தாமதம் ஏற்பட்டு, 6 ஆண்டுகள் கழித்து தற்போது ஜுன் மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளது. 
 
இதைத்தொடர்ந்து, பூமியின் மாசு கண்காணிப்பிற்காக விண்ணில் செலுத்தப்பட இருக்கும் செயற்கைகோளின் முதல் கட்ட சோதனை வெற்றி பெற்றதால், அடுத்த கட்ட சோதனையை முடித்து விட்டு, ஜுன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ திட்ட இயக்குநர் பிரபாகர் கூறினார்.