Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிறையில் சசிகலா மீது தாக்குதலுக்கு வாய்ப்பு: மத்திய உளவுத்துறை எச்சரிக்கை!!


Sugapriya Prakash| Last Modified வியாழன், 16 பிப்ரவரி 2017 (13:00 IST)
பெங்களுரு அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மீது தாக்குதல் நடக்க வாய்ப்புகள் உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

 
 
இதனால், மத்திய உளவுத்துறை வழங்கிய எச்சரிக்கையை தொடர்ந்து சசிகலாவிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 
ஜெயலலிதாவின் திடீர் மரணம் மற்றும் அவரது மரணத்தில் உள்ள மர்மங்கள், சசிகலா மீது கோபமாக மக்களிடம் வெளிப்பட்டு வருகிறது. 
 
இந்த சூழ்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள தமிழ் பெண் கைதிகள் சிலர் சசிகலாவை தாக்கலாம் என அச்சம் நிலவுகிறது. அப்படி நடக்காவிட்டால், சசிகலா தரப்பே திட்டமிட்டு ஒரு தாக்குதல் நாடகத்தை அரங்கேற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இப்படி நாடகத்தை அரங்கேற்றி, பெங்களூரில் தனக்கு பாதுகாப்பு இல்லை என கூறிவிட்டு, தமிழக சிறைக்கு தன்னை மாற்றுமாறு சசிகலா தரப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
 
நேற்று சசிகலா கோர்ட்டுக்கு வந்தபோது அவருடன் வந்த கார்கள் சில தாக்குதலுக்கு உள்ளாகின. அப்படி தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் பிடித்து விசாரித்தபோது அது சசிகலா தரப்பின் நாடகம் என தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :