செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : வியாழன், 16 அக்டோபர் 2014 (18:48 IST)

நான் உடை மாற்றுவதை ரகசியமாக படம் பிடித்து வெளியிட்டுள்ளனர் - சரிதாநாயர் பேட்டி

நான் அறையில் குளித்து விட்டு உடை மாற்றுவதை யாரோ ரகசியமாக படம் எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்பி உள்ளனர் என்று சரிதாநாயர் கூறியுள்ளார்.
 
கேரளாவில் நடந்த சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதாகி சமீபத்தில் ஜாமீனில் விடுதலையானவர் சரிதாநாயர். இவருக்கு காங்கிரஸ் கூட்டணி அரசின் முக்கிய பிரமுகர்கள் சிலர் உதவி செய்ததாக எதிர் கட்சியினர் குற்றம் சாட்டினர். இது பற்றி விசாரணை நடந்த நிலையில் முதலமைச்சர் உம்மன்சாண்டி அலுவலக ஊழியர்கள் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
 
இந்த நிலையில் சரிதா நாயருக்கு காங்கிரஸ் எம்.பி. ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கிளம்பியது. அவர் மீது சரிதாநாயர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் மீதான விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரிதாநாயர் நிர்வாணமாக காட்சி அளிக்கும் புகைப்படங்கள் ‘வாட்ஸ்அப்பில்’ பரவியது.
 
இதை அறிந்த சரிதாநாயர் அதிர்ச்சி அடைந்தார். அவரிடம் நிருபர்கள் வாட்ஸ் அப்பில் காணப்படும் காட்சிகள் உண்மை தானா? அதில் இருப்பது நீங்கள் தானா? என்று கேட்டனர். அதற்கு பதில் அளிக்க மறுத்த சரிதாநாயர் இது பற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்றும், ஆபாச படங்களை வெளியிட்ட நபர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறினார். வாட்ஸ் அப் படம் குறித்து சரிதாநாயர் கருத்து தெரிவிக்க மறுத்ததால், அந்த படத்தில் இருப்பது அவர் தான் என செய்திகள் பரவியது. இதனால் ஆத்திரம் அடைந்த சரிதாநாயர் நேற்று நிருபர்களிடம் இந்த சம்பவம் பற்றி கூறியதாவது:–
 
வாட்ஸ் அப்பில் காணப்படும் படம் என்னுடையது தான். அது நான் அறையில் குளித்து விட்டு உடை மாற்றுவதை யாரோ ரகசியமாக படம் எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்பி உள்ளனர்.
 
அரசியல் பிரமுகர்கள் சிலர் என்னோடு நெருக்கமாக இருந்ததாக ஏற்கனவே நான் கூறி இருந்தேன். அவர்கள் யார்? என்பதை வெளியிட வேண்டும் என்றும் அவர்களுடன் சேர்ந்திருக்கும் படங்களை பிரசுரிக்க வேண்டும் என்றும் எனக்கு சிலர் மிரட்டல் விடுத்தனர். அதற்கு நான் உடன்படாததால் இப்போது எனது ஆபாச படங்கள் வெளியாகி இருக்கிறது என்று கருதுகிறேன். இதை நான் சும்மா விடமாட்டேன். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கேரள நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்வேன். நேற்றும் கூட என்னை செல்போனில் அழைத்து மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்கள் பற்றியும் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிப்பேன் என்று அவர் கூறினார்.
 
சரிதாநாயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் கேரளாவின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலரது முகமூடி கிளிக்கப்படும் என எதிர் கட்சியினர் கூறி உள்ளனர். இதனால் கேரளாவில் மீண்டும் சரிதாநாயர் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.