வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 27 நவம்பர் 2014 (20:07 IST)

பெண்கள் பாரபட்சமாகவும், விலங்குகளைப் போலவும் நடத்தப் படுகிறார்கள் – சானியா மிர்சா

பெண்கள் பாரபட்சமாகவும், விலங்குகளைப் போலவும் நடத்தப்படுகிறார்கள் என்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார்.

இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பெண்கள் சமத்துவம் குறித்த விழிப்புணர்வை பிரசாரத்தையும் செய்து வருகிறார்.

இது குறித்து டெல்லியில் நடந்த ஒரு விழாவில் சானியா மிர்சா பேசும் போது, ’நான் ஒரு பெண்ணாக இருப்பதால், வாழ்க்கையில் நிறையப் பிரச்சினைகளை எதிர்கொண்டேன். நான் ஒரு ஆணாக இருந்திருந்தால் சில சர்ச்சைகளை தவிர்த்திருக்க முடியும்.

அதிகமானப் பெண்கள் விளையாட்டுத் துறைக்கு வரவேண்டும். தற்போது நமது கலாசாரம் மாறி வருகிறது.  அரசு இதில் நிறைய மாற்றங்களை செய்யப்போகிறது என நான் நினைக்கிறேன்.

சமூகப் பாலின சமத்துவமின்மை குறித்து அரசு பேசிவருவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. கலாசாரம் மாற வேண்டும் என்றால் ஊடகங்கள் தான் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்.

ஒருநாள் அனைவரும் ஆணும் பெண்ணும் சமம் என சொல்வார்கள் ,பெண்கள் ஒரு பொருளைப் போன்று நடத்தப்படமாட்டார்கள். பெண்கள் பாராபட்சமாக நடத்தப்படுகிறார்கள். அவர்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள். அது சரியில்லை. நமது சிந்தனை மாற வேண்டும். அதே போல்  பெண்கள் தங்கள் சொந்த மதிப்பு உணர வேண்டும்’ இவ்வாறு கூறினார்.