Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நடிகையில் அரை நிர்வாண புகைப்படம் வெளியாக காரணமான எம்.எல்.ஏ மகன்


Abimukatheesh| Last Modified சனி, 7 ஜனவரி 2017 (19:29 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தின் சமாஜ்வாதி கட்சி தலைவரான அபு அஸ் பெங்களூரில் பெண்களுக்கு நடந்த வன்கொடுமை குறித்து கேலி செய்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டார். அதற்கு பதிலளித்த நடிகைக்கும், அபு அஸ்மி மகனுக்கு டுவிட்டரில் சண்டை வலுக்க, சமாஜ்வாதி கட்சி நிராவாகி அமித் பிரகாஷ் சிங் என்பவர் நடிகையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

 

 
பெங்களூரு புது வருட கொண்டாடத்தின் போது பெண்களுக்கு நடந்த வன்கொடுமை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த விவகாரத்தில் சமாஜ்வாதி கட்சியின் எம்.எல்.ஏ அபு அஸ்மி தனது டுவிட்டர் பக்கத்தில், சர்க்கரை இருக்கும் இடத்தை நோக்கி எறும்பு வரத்தான் செய்யும் என்று பதிவிட்டார்.
 
இவரது கருத்துக்கு பாலிவிட் நடிகை இஷா குப்தா, உங்களை போன்ற முட்டாளை பெற்றெடுத்த பெண்ணை தான் குறை கூற வேண்டும், அதை நினைத்து அவரே நொந்திருப்பார் என்று ஆவேசமடைத்து பதில் டுவிட் செய்திருந்தார்.
 
இதை பார்த்த அபு அஸ்மி மகன் இஷா குப்தாவுக்கு டுவிட் செய்தார். அதில் அவர் கூறியதாவது:-
 
இஷா, அபு அஸ்மியை பெற்றெடுத்தது என் பாட்டி. அவர் இப்போது இல்லை. அவர் உங்களை விட பல மடங்கு கண்ணியமானவர் என பதில் டுவிட் செய்தார்.
 
அபு அஸ்மி குடும்பம் மற்றும் இஷா குப்தா இடையே ஒரு கருத்து போர் டுவிட்டரில் நடந்துள்ளது.
 
இதையடுத்து சமாஜ்வாதி கட்சி நிர்வாகி இஷாவின் அரை நிர்வான புகைப்டத்தை வெளியிட்டு அவரை விமர்சித்துள்ளார். இஷா முதலில் இந்த புகைப்படத்தை பாருங்கள் பின் அபு அஸ்மி பற்றி பேச உங்கள் என்ன உரிமை உள்ளது என்று கூறுங்கள் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  


இதில் மேலும் படிக்கவும் :