Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உ.பி தேர்தலில் பாஜகவை தோற்கடித்தது சமாஜ்வாதி கட்சி

up
Last Updated: புதன், 14 மார்ச் 2018 (17:41 IST)
உத்திரபிரதேச மாநிலம் புல்பூர் தொகுதியில் நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலில் பாஜகவை தோற்கடித்து சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது.
 
உத்திரபிரதேச மாநிலமான கோரக்பூர், புல்பூர் தொகுதியில் கடந்த 11-ம் தேதி மக்களவை இடைதேர்தலுக்கான ஒட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் கோரக்பூர் தொகுதியில் 47.45 சதவிதமும் வாக்குகளும் , புல்பூர் தொகுதியில் 37.39 சதவீத வாக்குகளும் பதிவானது. 
 
இந்நிலையில், இன்று ஒட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியிடப்பட்டது, அதில் புல்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் கே.எஸ் பட்டேலை சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் 59 ஆயிரம் ஓட்டு வாக்கு வித்தியசாத்தில் வெற்றி பெற்றார். 
 
இந்த வெற்றி தொடர்பாக மேற்கு வாங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில்,
 
“உத்திரபிரேதச தேர்தலில் அகிலேஷ்- மாயாவதி கூட்டணிக்கு சிறப்பான வெற்றி கிடைத்துள்ளது. பாஜக கட்சியின் முடிவுக்கான ஆரம்பம் இதுதான்”என பதிவிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :