வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : வியாழன், 3 செப்டம்பர் 2015 (14:50 IST)

பீகாரில் பாஜகவை எதிர்த்து சமாஜ்வாடி கட்சி தனித்துப் போட்டி

பீகாரில் பாஜகவை எதிர்த்து முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பீகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளத்தின் ஆட்சி தற்பொது  நடைபெற்றுவருகிறது. நவம்பர் மாதம் 29 ஆம் தேதியுடன் பீகார் சட்டசபையின் தற்போதய பதவிகாவம் முடிகிறது.
 
இதனால் விரைவில் பீகாரில் சட்டசபை தேர்தலுக்கான தேதியை, தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அறிவித்த சமாஜ்வாடி கட்சி தற்போது திடீரென தனியாக போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் ராம் கோபால் யாதவ் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து ராம் கோபால் யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சமாஜ்வாடி கட்சியானது பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவுசெய்துள்ளது.
 
தேவைப்படும் பட்சத்தில் பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருக்கிறோம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இதுதொடர்பாக எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை.
 
யார் தவறு செய்தனர் என்று மக்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டு விவகாரத்தில் எங்களை கலந்து ஆலோசிக்காதது எங்களை மிகவும் அவமதிப்பதாக உள்ளது" என்று கூறினார்.