1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 6 மே 2015 (17:46 IST)

சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை: இதயமே நொறுங்கியது போல உள்ளது - ஹன்சிகா

மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதற்காக சல்மான் கான் தனது கேலக்ஸி அபார்ட்மெண்டில் இருந்து நீதிமன்றத்திற்கு வந்தார்.
 

 
நேற்று இரவு அவரது வீட்டிற்கு  வந்த நடிகர் ஷாருக் கான் அவருக்கு நம்பிக்கையும் ஆதரவும் தெரிவித்தார்.
 
இன்று  நடிகை ஹேமமாலினி அவரது தண்டனை குறித்து தகவல் அறிந்ததும் அவரது தண்டனைக்கு வருந்துவதாகவ்ம், ஆனால் சட்டத்திற்கு மதிப்பளிப்பதாகவும் கூறினார். மேலும் சல்மான் கானுக்கு குறைந்த அளவு தண்டனையே கிடைக்க கடவுளை பிரார்த்திப்பதாகக் கூறினார்.
 
சல்மான் கான் நடித்த தபாங் படத்தில் நடித்து இந்தி சினிமாவில் அறிமுகமானவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் ஆவார்.
 
இந்த நிலையில் சல்மான் கான் வழக்கு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள சோனாக்ஷி கூறியிருப்பதாவது:-
 
"மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி. சல்மான் கானுக்கு ஆதரவாக இருப்போம் என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. சல்மான் கான் நல்ல மனிதர். அந்த குணத்தை அவரிடமிருந்து யாரும் எடுக்க முடியாது" என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார் சோனாக்ஷி சின்ஹா.
 
நடிகை ஹன்சிகா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘இதயமே நொறுங்கியது போல உள்ளது. பேச வார்த்தை இல்லை. சல்மான் கான் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்' என்று கூறியுள்ளார்.
 
நடிகர் ரிஷி கபூர் வெளியிட்டுள்ள டிவிட்டில், ‘இந்த கடினமான நேரத்தில் கான்களுடன் கபூர் குடும்பம் இருக்கிறது. காலம்தான் மிகச் சிறந்த நிவாரணி. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்' என்று கூறியுள்ளார்.
 
இயக்குனர் கரண் ஜோகர் தனது டுவிட்டரில், நான்  இப்போது உணர்வு பூர்வமாக மட்டும்தான் பதிலளிக்க முடியும். என் எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனைகளை சல்மான் மற்றும் அவரது குடும்பம் மன வலிமை பெற விரும்புகிறேன்.
 
நடிகர் ரித்திஷ் தேஷ் முக் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
 
நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது. ஆனால் எனது இதயம் வெளியே வந்துவிட்டது. இந்தத் துறையில்  நான் சந்தித்தவர்களில் பெரிய மனம் படைத்தவர் சல்மான் கான் எனக் கூறியுள்ளார்.