சொத்து விவரம் தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு சம்பளம் இல்லை - அரசின் அதிரடி ஆணை

assert
Last Updated: ஞாயிறு, 15 ஏப்ரல் 2018 (11:16 IST)
தங்களுடைய சொத்துக் கணக்கை தாக்கல் செய்யாத அதிகாரிகளின் சம்பளத்தை நிறுத்தி வைக்குமாறு குஜராத் மாநில நிதித்துறைக்கு, பொது நிர்வாகத்துறை கடிதம் எழுதியுள்ளது.
குஜராத் அரசு அலுவலகங்களில் கிரேட் 1 மற்றும் கிரேட் 2 பிரிவில் வேலைபார்க்கும் 12 ஆயிரம் அதிகாரிகள் அனைவரும், 2017-18-ம் ஆண்டுக்கான அவரவர் சொத்து விவரத்தை ஏப்ரல் 10-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில அரசு கெடு விதித்திருந்தது. அவர்களில் இன்னும் 3 ஆயியம் பேர் சொத்துக் கணக்கை சமர்ப்பிக்கவில்லை.
guj
இதனையடுத்து சொத்து விவரத்தை தாக்கல் செய்யாத அதிகாரிகளின் இந்த மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என மாநில தலைமை செயலாளர் ஜே.என்.சிங் தெரிவித்தார். இதனால் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து உள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :