1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: புதன், 14 அக்டோபர் 2015 (07:32 IST)

சாகித்ய விருதுகளை திரும்ப அளி்க்கும் விவகாரம்: மத்திய அரசு கண்டனம்

மத வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எழுத்தாளர்கள் தேர்ந்தெடுத்துள்ள போராட்ட வடிவம் முற்றிலும் தவறானது என்று மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.


 
 
இந்தியாவில் மத வன்முறை அதிகரித்து வருவதாக கூறி சாகித்திய விருதுகளை பெற்ற எழுத்தாளர்கள் அதனை மத்திய அரசிடம் திரும்ப அளித்து வருகின்றனர்.
 
எழுத்தாளர்களின் இந்த போராட்ட அனுமுறை மத்திய அரசுக்கு பின்னடவை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் எழுத்தாளர்களின் போராட்ட வடிவம் முற்றிலும் தவறானது என்று மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர்  மகேஷ் சர்மா கூறியுள்ளார்.
 
இது குறித்து அவர் கூறுகையில், சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய அரசு அளிப்பதில்லை.  சுய அதிகாரம் பெற்ற அமைப்பு  சாகித்திய விருதுளை வழங்குகிறது. இந்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்மென்றால் மாநில அரசுக்கு எதிராக போராட வேண்டும்.
 
சிறப்பான படைப்புகளுக்காக எழுத்தாளர்களும் கவிஞர்களும் பெற்ற விருதுகளை வைத்துக்கொள்வதும், திருப்பியளிப்பதும் அவரவர் விருப்பம் சார்ந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.