1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 25 ஏப்ரல் 2016 (11:48 IST)

சச்சின் டெண்டுல்கருக்கு பிறந்தநாள்: நடிகர் தனுஷ் வாழ்த்து

சச்சின் டெண்டுல்கருக்கு பிறந்தநாள்: நடிகர் தனுஷ் வாழ்த்து

கிரிக்கொட் வீரரும் எம்.பியுமான சச்சின் டெண்டுல்கர் தனது 43ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு நடிகர்கள் அமிதாப்பச்சன், தனுஷ் உள்ளிட்ட திரைத்துறையினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


 


கிரிக்கெட் ஜாம்பவானும், டெல்லி மேல்-சபை உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர் நேற்று தனது 43ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
 
அப்போது, சச்சின் டெண்டுல்கர் தனது பிறந்த நாளையொட்டி சிறுவர்களுக்கு கிரிக்கெட் விளையாடுவது குறித்து கற்றுக்கொடுத்து மகிழ்ந்தார்.
 
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கருக்கு நடிகர்கள் அமிதாப்பச்சன், நடிகர் தனுஷ் உள்பட திரைப்பட நட்சத்திரங்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். 
 
இது குறித்து நடிகர் அமிதாப்பச்சன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "பிறந்தநாள் வாழ்த்துக்கள் சச்சின். நீங்கள் எங்களின் பெருமை, கவுரவம். உங்களால் நாங்கள் பெருமை அடைகிறோம்" என்று கூறியுள்ளார்.
 
இது குறித்து, நடிகர் தனுஷ் தனது சமூகவலை தள பக்கத்தில், "கிரிக்கெட்டின் கடவுளுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். இவரால் நாடு பெருமை அடைந்துள்ளது" என்று கூறி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
இதே போல் பலரும் சச்சினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துளனர் என்பது குறிப்பிடத்தக்கது.