வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 4 பிப்ரவரி 2017 (13:15 IST)

பாஜகவில் இணைகிறார் காங்கிரஸ் முன்னாள் முதல்வர்!

பாஜகவில் இணைகிறார் காங்கிரஸ் முன்னாள் முதல்வர்!

காங்கிரஸ் கட்சியில் இருந்த கர்நாடகா முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் விரைவில் பாஜகவில் இணைவார் என கர்நாடக மாநில பாஜக தலைவர் எதியூரப்பா தெரிவித்துள்ளார்.


 
 
காங்கிரஸ் கட்சி தன்னுடைய வயதை காரணம் காட்டி தன்னை கட்சியில் இருந்து ஓரம்கட்டி வைத்துள்ளதாக குற்றம் சாட்டிய எஸ்.எம்.கிருஷ்ணா சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
 
தன்னுடைய ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்த எஸ்.எம்.கிருஷ்ணா கடந்த வாரம் தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் அவர் தற்போது பாஜகவில் சேர முடிவெடுத்துள்ளார்.
 
இது தொடர்பாக பேட்டியளித்த கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, காங்கிரஸ் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் சேர முடிவு செய்துள்ளார். அவர் எப்போது இணைவார் என்பது தெரியாது, ஆனால் அவர் பாஜகவில் இணைய இருப்பது 100 சதவீதம் உறுதி என கூறியுள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தையும் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.
 
முன்னாள் முதல்வராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் இணைய இருப்பது அந்த காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவருக்கு வயது 84 ஆகும்.