Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கார் விபத்தில் நடிகை சனுஷா மரணம்? - பரவும் புகைப்படம்


Murugan| Last Modified செவ்வாய், 31 ஜனவரி 2017 (13:02 IST)
கார் விபத்து ஒன்றில் நடிகை சனுஷா மரணம் அடைந்து விட்டதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

 

 
தமிழில் ரேணிகுண்டா, நந்தி, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், ஏராளமான மலையாளப் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
 
இந்நிலையில், இவர் ஒரு கார் விபத்தில் மரணம் அடைந்துவிட்டதாக சில தகவல்கள் பரவியது. சேதமடைந்த ஒரு காரின் புகைப்படத்தையும் வெளியிட்டு அவர் சென்ற கார் இதுதான் எனவும் கூறப்பட்டது. 
 
ஆனால், அது உண்மையில்லை. வெறும் வதந்தி என்பது தெரிய வந்துள்ளது. இப்படி வெற்று வதந்திகளை பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சனுஷாவின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :