வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: புதன், 23 செப்டம்பர் 2015 (12:47 IST)

உச்சநீதிமன்ற உத்தரவைப்போல ஆர்.எஸ்.எஸ்.சின் உத்தரவை பா.ஜ.க. பின்பற்றுகிறது: நித்திஷ்குமார்

உச்சநீதிமன்ற உத்தரவைப்போல ஆர்.எஸ்.எஸ்.சின் உத்தரவை பா.ஜ.க. பின்பற்றுவதாக பீகார் முதல் அமைச்சர் நித்திஷ்குமார் குற்றஞ்சாட்டி உள்ளார்.


 
 
பீகார் தேர்தல் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் இவ்வாறு கூறினார், " அனைத்து சமூகத்தவர்களும் எங்களது வேட்பாளர் பட்டியலில் இடம்பெற  உறுதி செய்யப்பட்டுள்ளது.  நான் வெளியிட உள்ள  வேட்பாளர் பட்டியலை லல்லு பிரசாத் யாதவ் ஏற்றுக் கொண்டுள்ளார். இது குறித்து காங்கிரஸிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். 
 
"பீகாரில் வளர்ச்சியை உருவாக்கவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் பா.ஜ.க.வோ வாக்காளர்களை பிரிக்கவே விரும்புகிறது. யாருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், யாருக்கு அளிக்கக் கூடாது என்பதை தீர்மானிக்க கூடுதல் அரிசியலமைப்பு குழுவை அமைக்க ஆர்.எஸ்.எஸ். முயலுகிறது".
 
"இது ஆபத்தான எண்ணம். எப்படி உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அனைவரும் பின்பற்றுகிறோமோ அது போல ஆர்.எஸ்.எஸ்.சின் உத்தரவை உச்சநீதிமன்ற தீர்ப்பு போல பா.ஜ.க.பின்பற்றுகிறது. என்று கூறினார்.