1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 21 நவம்பர் 2015 (05:09 IST)

வர்த்தக உலக சூப்பர் ஸ்டார் இன்போஸிஸ் ரோகன் மூர்த்தி -லட்சுமி வேணு தனித்தனியே பிரிந்தனர்

இந்திய வர்த்தக உலகின் சூப்பர் ஸ்டார் இன்போஸிஸ் ரோகன் மூர்த்தியும், அவரது மனைவி லட்சுமி வேணுவும் சட்டப்படி விவகாரத்து பெற்று பிரிந்தனர்.
 

 
இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையில் மிகப் பெரிய நிறுவனமும் புகழ் பெற்ற நிறுவனம் இன்போஸிஸ். இதன் நிறுவனர். என்.ஆர்.நாராயணமூர்த்தி. இவரது ஒரே புதல்வர் ரோகன் மூர்த்தி.
 
அதே போான்று, இந்தியாவிலேயே, மிகப் பெரிய மோட்டார் நிறுவனம்  டி.வி.எஸ். குரூப் நிறுவனம் ஆகும். இதன் தலைவர் வேணுசீனுவாசன். இவரது ஒரே மகள் லட்சுமி.
 
இந்த நிலையில், கடந்த ஜூன் 2011 ஆம் ஆண்டு சென்னையில், ரோகன் மூர்த்திக்கும், லட்சுமிக்கும் வெகுஆடம்பரகமாக திருமணம் நடைபெற்றது. இனிமையான இன்பமான இல்லர வாழ்க்கை அமைந்து மகிழ்ச்சியோடு வாழ்க்கை நடத்திய இவர்களது வாழ்வில் புயல் வீசத் தொடங்கியது. இதனால், இந்த தம்பதிகள் இருவரும் ஒருவரை ஒருவர்விட்டு பிரிவது என முடிவு செய்தனர்.
 
இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இவர்களுக்கு விவாகரத்து வழங்கி உள்ளது.