Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

திருப்பதியில் படிக்கெட் வழியாக செல்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்...

Last Modified: செவ்வாய், 11 ஜூலை 2017 (17:36 IST)

Widgets Magazine

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மலைப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.


 

 
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு லட்சக்கணக்கானோர் தினமும் வருகின்றனர். அதில் பலர் கட்டணம் மூலமாகவும், இலவச தரிசன வரிசை வழியாக சென்றும் ஏழுமலையான தரிசிக்கின்றனர். அதேபோல், மலைப்பாதை வழியாக அமைக்கப்பட்டுள்ள படிக்கெட் வழியாகவும், பக்தர்கள் நடந்து சென்று தரிசனம் பெறுகின்றனர். அவ்வாறு மலைப்பாதை வழியாக செல்பவகளுக்கு இலவச தரிசனம் அளிக்கப்படுகிறது. 
 
எனவே, தினமும் ஏராளமான பக்தர்கள் அந்த மலைப்பாதை வழியாக நடந்து வருகின்றனர். எனவே, தற்போது அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. திங்கள் முதல் வியாழன் வரை மலைப்பாதை நடந்து வருபவர்களுக்கு, அதுவும் 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே இலவச அனுமதி சீட்டு வழங்கப்பட இருக்கிறது. அதற்கு மேல் வருபவர்கள் மற்றும் வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய நாட்களில் மலைப்பாதை வழியாக வருபவர்கள், இலவச தரிசனத்தில் சென்று தரிசனம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த அறிவிப்பு திருப்பதி கோவிலுக்கு வருபவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவை தேவஸ்தானம் பரிசீலனை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சென்னை மாணவர்களிடம் தோல்வியடைந்த அமெரிக்க கடற்படை வீரர்கள்

இந்தியாவுடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட வந்த அமெரிக்க கடற்படை வீரர்கள் சென்னை YMCA ...

news

ஓரினச் சேர்க்கை மோகம்; திருமணம் செய்த இரு பெண்கள்: கதறும் குடும்பம்!

கர்நாடக மாநிலத்தில் தூரத்து உறவினர்களான இரு ஓரினச் சேர்க்கை பெண்கள் காதலித்து திருமணம் ...

news

ரூ.10க்கு ஆவின் பால் பாக்கெட் - ராஜேந்திர பாலாஜி அறிவிப்பு

பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 225 மி.லிட்டரில் ரூ.10க்கு பால் பாக்கெட்டை ஆவின் பால் ...

news

மாட்டிறைச்சி உத்தரவுக்கு தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி

மாட்டிறைச்சி குறித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவிற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்து ...

Widgets Magazine Widgets Magazine