10 ரூபாய் நாணயம் செல்லுமா? செல்லாதா?


Sugapriya Prakash| Last Modified புதன், 4 ஜனவரி 2017 (10:47 IST)
10 ரூபாய் போலி நாணயங்கள் புழக்கத்தில் வந்துவிட்டதால், அவற்றைச் செல்லாது என அறிவிக்கப் போவதாக எழுந்துள்ள செய்துகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. 

 
 
தற்போது உள்ள சில்லரை பிரச்சினை காரணமாக 10 ரூபாய் நாணயங்கள் அதிக அளவு புழக்கத்தில் உள்ளன. 10 ரூபாய் நாணயங்கள் 2010 மற்றும் 2015 ஆண்டுகளளில் அச்சிடப்பட்டுள்ளன. 
 
இந்நிலையில் பணத்தட்டுப்பாடு காரணமாக இந்த 2 விதமான 10 ரூபாய் நாணயங்களும் புழக்கத்திற்கு வந்தன. இதில் 2010-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயம் போலியானது என்ற தகவல் பரவ ஆரம்பித்தது. இதனால் பஸ்கள், டீக்கடைகள், வர்த்தக நிறுவனங்களில் இந்த நாணயங்களை பொதுமக்களிடம் இருந்து வாங்க மறுத்து வருகின்றனர். 
 
இதற்கிடையில் மத்திய அரசு 10 ரூபாய் நாணயத்தையும் விரைவில் செல்லாது என்று அறிவிக்க உள்ளது என்ற வதந்தி பரப்பப்பட்டு வந்தது. 
 
இதனால் ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயங்களை ஒழிக்கும் திட்டம் எதுவுமில்லை என்றும், தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களைப் பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :