1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 3 ஜூன் 2017 (15:43 IST)

பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும்; அமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தல்

ஜிஎஸ்டி தொடர்பான மாநாட்டில் 42 பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தியுள்ளார்.


 

 
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு என்ற ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை நீண்ட நாட்களுக்கு பின் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள இந்த வரி விதிப்பு குறித்து டெல்லியில் மாநாடு நடைப்பெற்று வருகிறது.
 
இதில் கலந்துக்கொண்ட தமிழக நிதியமைச்சர் ஜெயகுமார் 42 பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
வணிகச் சின்னம் இடப்பட்ட மற்றும் இடப்படாத உணவு பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கக் கூடாது. குடிநீர் கேன், கைவினை பொருள்கள் மற்றும் கைத்தறி துணிகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். மசாலா பொருள்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கவும். மசாலா பொருள்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கவும், என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் முக்கிய பிரதான பொருட்களுக்கு வரி விதிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.