செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 21 ஜூலை 2021 (10:01 IST)

உளவுத்துறை எச்சரிக்கை : மூடப்படும் செங்கோட்டை!

உளவுத்துறை எச்சரிக்கை : மூடப்படும் செங்கோட்டை!
டெல்லி செங்கோட்டையில் இன்று முதல் வரும் 15 ஆம் தேதி வரை பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 
நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக டெல்லி செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில் இன்று முதல் வரும் 15 ஆம் தேதி வரை பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.