வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : வியாழன், 21 ஜனவரி 2016 (15:21 IST)

வெள்ளி இழை இல்லாமல் 1000 ரூபாய் நோட்டுகள் : தவறாக அச்சடித்த ரிசர்வ் வங்கி

வெள்ளி இழை இல்லாமல் சுமார் 30 ஆயிரம் கோடி மதிப்பிலான 1000 ரூபாய் நோட்டுகளை தவறுதலாக ரிசர்வ் வங்கி அச்சடித்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் விதமாக, இந்திய ரூபாய் நோட்டுகளில் வெள்ளி கம்பி சேர்த்து ரிசர்வ் வங்கி அச்சடித்து வருகிறது. ஆனால் தவறுதலாக, அந்த வெள்ளிக்கம்பி இல்லாமல் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடித்துள்ளது. அதில் 20 ஆயிரம் கோடி ரூபாய் ரிசர்வ் வங்கியிடமும், 10 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருப்பதாகவ்ம் ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.
 
எனவே அந்த நோட்டுகள் செல்லாது என்றும், புழக்கத்தில் இருக்கும் வெள்ளிக் கம்பியில்லாத 1000 நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 
தவறாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் தீயிட்டு எரிக்க ஆர்.பி.ஐ முடிவு செய்துள்ளது. மேலும், தவறுதலாக ரூபாய் நோட்டுகளை அச்சடித்த அச்சகத்தின் மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.