வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 5 ஜூலை 2019 (18:44 IST)

அணை உடைந்ததற்கு நண்டுகள் தான் காரணம்: அமைச்சரின் வேடிக்கையான கருத்து

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்த கனமழையில் ரத்னகிரி அணை உடைந்ததற்கு காரணம் நண்டுகள் தான் என, சிவசேனா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் தனஜி சவந்த் விளக்கம் அளித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த வாரம் தொடக்கத்தில் 4 நாட்கள் கன மழை பெய்தது. இந்த மழையில் ரத்னகிரி மாவட்டத்திலுள்ள திவாரே அணை உடைந்தது.

அணை உடைந்ததால், அதனை சுற்றியுள்ள 7 கிராமங்களிலுள்ள குடியிறுப்புகள் சேதம் அடைந்தன. மேலும் 18 பேர் உயிரிழந்தனர்.

இதனை குறித்து மகாராஷ்டிராவின் நீர் மேலாண்மைத் துறை அமைச்சர் தனஜி சவந்த், அந்த பகுதியிலுள்ள நண்டுகளால் தான், திவேரே அணை பலவீனமாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தால் ரத்னகிரி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் 8 மணி நேரத்தில் 192 மி,மீ, அளவுக்கு மழை பெய்துள்ளது என்றும், பெய்தது மழையா அல்லது வானம் பொத்துகொண்டு விழுந்ததா எனவும் தெரியவில்லை எனவும் தனஜி சவந்த் கூறியுள்ளது பெரும் வேடிக்கையாக பார்க்கப்படுகிறது.