ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிப்பு...


Murugan| Last Updated: திங்கள், 19 ஜூன் 2017 (15:07 IST)
நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

 
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலையுடன் முடிவடையவுள்ளதால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை 17ஆம்தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள் ஓட்டு போடவுள்ளனர்.
 
இந்நிலையில், பாஜக சார்பில் பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அடிப்படையில் வழக்கறிஞரான இவர் தாழ்த்தப்பட்டோர் அமைப்பை தலைவராக இருக்கிறார். உத்தரபிரதேசத்தில் இரு முறை மேல் சபை எம்.பி.யாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.


 

 
எனவே, இவருக்கு ஆதரவு திரட்டும் பணியில் பாஜக தற்போது ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயு மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரிடம் பிரதமர் மோடி ஆதரவு கோரியுள்ளார். மேலும், நாளை மாலை 5 மணிக்கு ராம்நாத் கோபிந்த் மோடியை சந்திக்க இருக்கிறார்.
 
மேலும், இதுபற்றி முடிவெடுக்க வருகிற 22ம் தேதி, எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி முடிவெடுக்கவுள்ளன.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :