முதல்வர் பதவி தான் முக்கியம்: காங். தலைவர் போட்டியில் இருந்து விலகிய அசோக் கெலாட்!
ராஜஸ்தான் முதல்வர் ஆக இருந்து வரும் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அவர் போட்டியில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது.
ஒருவருக்கு ஒரு பதவி என்ற வகையில் காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலில் போட்டியிட்டால் ராஜஸ்தான் முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது
ஆனால் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயங்கிய நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவியை விட முதல்வர் பதவியே மேல் என முடிவு செய்த அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் திக்விஜய் சிங் மற்றும் சசிதரூர் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் பதவியில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முப்பதாம் தேதி வரை மனு தாக்கல் செய்ய கால அவகாசம் இருப்பதால் மேலும் ஒரு சிலர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
Edited by Mahendran