1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (17:00 IST)

ராஜஸ்தான் இடைத்தேர்தலில் பாஜக கோட்டை விட்டது: காங்கிரஸ் 3 தொகுதிகளில் வெற்றி

ராஜஸ்தான் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளில் 3 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
 
வெயர், நசீராபாத், சுராஜ்கர், கோட்டா ஆகிய 4 தொகுதிகளில் செப்டம்பர் 13 இல் இடைத்தேர்தல் நடைபெற்றது.
 
இதில் மூன்று தொகுதிகளை காங்கிரசிடம் பாஜக இழந்துள்ளது. கோட்டா தொகுதியை மட்டும் அக்கட்சி தக்கவைத்துக் கொண்டுள்ளது.