வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 26 நவம்பர் 2015 (04:41 IST)

தமிழக வெள்ள சேதம் பற்றி நாடாளுமன்றத்தில் புயல் கிளப்புகிறார் கனிமொழி

தமிழக வெள்ள சேதம் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு முன்வதுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, டெல்லியில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
 
இதில் திமுக சார்பில் திமுக எம்.பி. கனிமொழி பங்கு கொண்டார். பின்பு இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகம் மற்றும் ஆந்திராவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளச்சேதம் மற்றும் நிவாரணப் பணிகள் பற்றி விவாதிக்க வேண்டும் என்றும், தற்போது பெருகியுள்ள மதவாதம் மற்றும் சகிப்புத்தன்மையற்ற நிலை குறித்த விவாதம் நடத்தப்படவேண்டும் என்றும், சரக்கு, சேவை வரி மசோதாவில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு விவாதத்துக்கு நேரம் ஒதுக்குவதாக மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.