வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 26 பிப்ரவரி 2015 (12:58 IST)

'17 ஆயிரம் கழிப்பறைகள் சீரமைக்கப்படும்' - மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு

17 ஆயிரம் கழிப்பறைகள் சீரமைக்கப்படும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது பட்ஜெட் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 
2015–16 ஆம் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை, மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு நாடாளுமன்றத்தில தாக்கல் செய்து வருகிறார்.
 
இந்த ரயில்வே பட்ஜெட், நரேந்திர மோடி தலைமையிலான, பாஜக அரசின் முதல் முழுமையான ரயில்வே பட்ஜெட், மேலும் சுரேஷ் பிரபு தாக்கல் செய்யும் முதல் ரயில்வே பட்ஜெட்டும் ஆகும்.

 
ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து வருகிறார். இது குறித்து சுரேஷ் பிரபு குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
 
ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள தனித்துறை அமைக்கப்படும். 650 ரயில் நிலையங்களில் பசுமைக் கழிப்பறைகள் கட்டப்படும்.
 
17 ஆயிரம் கழிப்பறைகள் சீரமைக்கப்படும். 24 மணி நேரமும் செயல்படும் குறைதீர் மையங்கள் அமைக்கப்படும். இதற்கான உதவி எண் 138
 
குறை தீர்க்க மொபைல் அப்ளிகேஷன் மார்ச் 1 முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. ஸ்மார்ட் போன் மற்றும் தொலைபேசி மூலம் முன்பதிவு இல்லா டிக்கெட்கள் வழங்கப்படும்.
 
முன் பதிவு செய்த 5 நிமிடங்களில் டிக்கெட்டை பெறும் வசதி செய்யப்படும். 109 ரயில் நிலையங்களில் மின்னணு முறையில் உணவு வழங்கப்படும்.
 
ரயில் புறப்படு மற்றும் வருகை நேரம் குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் அறிவிக்கப்படும். ரயில் பாதை அகலப்படுத்துதல் மற்றும் மின் மயமாக்கல் அதிகரிக்கப்படும்.
 
சரக்கு போக்குவரத்தில் 100 கோடியிலிருந்து 150 கோடி வரை எடுத்துச் செல்லப்படும். பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படும்.
 
5 ஆண்டுகளில் 4 அடுக்கு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. நிதி சேவையில் தன்னிறைவு பெறப்படும். கூடுதல் முதலீடுகளால் வேலைவாய்ப்பு பெருகும்.