வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 16 ஏப்ரல் 2015 (14:36 IST)

57 நாட்களுக்குப் பின்னர் நாடு திரும்பினார் ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் துனைத்தலைவர் ராகுல் காந்தி 57 நாட்களுக்குப் பிறகு இன்று நாடுதிரும்பினார்.
 
டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரான ராகுல், தனக்கு ஓய்வு வேண்டும் என்று கட்சித்தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். சோனியா காந்தி ராகுலின் ஓய்வுக்கு ஒப்புதல் அளித்தார்.
 
அதன்படி கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராகுல் ஓய்வெடுக்க சென்றார். அவர் எங்கு சென்றார் என்பது ரகசியமாக இருந்த நிலையில், ராகுல் நாட்டில் இல்லாதது குறித்து பலரும் கிண்டல் செய்து வந்தனர். நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக நாட்டில் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அவர் ஓய்வு எடுக்க சென்றது தவறு என காங்கிரஸ் கட்சியினரே அதிருப்தி தெரிவித்தனர்.
 
இந்நிலையில் ஓய்வெடுக்க சென்ற 57 நாட்களுக்கு, பின்னர் ராகுல் காந்தி இன்று காலை 11.15 மணியளவில் தலைநகர் டெல்லிக்கு வந்தடைந்தார். பாங்காக்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் வந்திறங்கினார்.
 
விமான நிலையத்திற்கு வந்திருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகள் பிரியங்கா ஆகியோர் ராகுலை அன்புடன் வரவேற்றனர்.
 
பின்னர் அவர், தனது இல்லத்திற்குச் சென்றார். இதன் மூலம் நீண்டகாலம் நீடித்துவந்த சர்ச்கை முடிவுக்கு வந்துள்ளது.