வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 27 மார்ச் 2019 (17:21 IST)

’ நாடக தினம்’ மோடியை கலாய்த்து தள்ளிய ராகுல் காந்தி

இன்று நம் இந்திய விண்வெளித்துறையின் சார்பில் அதிவுன்னதமான செயற்கைக்கோளை விண்னில் செலுத்தியற்காக காலை பிரதமர் மோடி நாட்டு மக்களிடம்  தம் மகிழ்சியை தெரிவித்தார்.
இந்த செயற்கைக்கோள் எதிரி நாடுகள் நம்மை கண்காணித்து அழிக்க நினைத்தால் அதை அழிக்கும் சக்தி கொண்டுள்ளதாகவும் விண்வெளியில் செயற்கை கோளை சுட்டுவீழ்த்தும் என்று கூறினார். மேலும் இந்த செயற்கைக்கோளினால் ஒரு ஒட்டகம் எந்தப் பகுதியில் இருந்தாலும் அதனைக்கொண்டு கண்டுபிடிக்க முடியும்.
 
இந்த செயற்கைக்கோளை, அமெரிக்கா, சினா, ரஷ்யா ,ஆகிய நாடுகளுக்குப் பிறகு நான்காவதாக இந்தியா இந்த வரிசையில் நான்காவதாக இணைந்துள்ளது. இதை மிஷன் சக்தி என்று அழைத்துவருகின்றனர்.
 
இன்று காலையில் பாரத பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் காலை 11: 45 மணியிலிருந்து 12 மணிக்குள் நட்டுக் மக்களிடம் முக்கியமான விஷயம் குறித்து பேசவிருக்கிறேன் என்று தெரிவித்தார்.  
 
இந்நிலையில் காங்கிரஸ்  தலைவர் மோடியை கேலி செய்திருந்தார் 
 
தனது டிவிட்டர் பதிவில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது:
 
’பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆகச் சிறந்த உழைப்புக்காக பெருமைப்படுகிறேன். நான் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று உலக நாடக தினம் என்று பதிவிட்டுள்ளார். ’