வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 24 நவம்பர் 2015 (13:33 IST)

ராகுல் காந்திக்கு எதிரான வழக்கை உடனடியாக விசாரிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

காங்கிரஸ் துணைத்தலைவல் ராகுல் காந்திக்கு எதிராக, குடியுரிமை பிரச்சனை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை உடனடியாக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.


 

 
ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டு குடிமகன் என்று அவர் பங்குதாரராக உள்ள லண்டன் நிறுவனம் ஆண்டறிக்கை வெளியிட்டுள்ளது என்றும், எனவே அவரது இந்திய நாட்டு குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணின் சுயசாமி கூறினார்.
 
இது குறித்து அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியதுடன் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று சபாநாயகருக்கும் கடிதம் எழுதியிருந்தார்.
 
இந்நிலையில் ராகுல் காந்தி குடியுரிமை பிரச்சனை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
அதில், இந்த மனுவை உடனே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
 
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் உடனடியாக இதை விசாரிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
 
முன்னதாக, சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்கமறுத்து திருப்பி அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.