Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆறே மாதத்தில்... மோடிக்கு சவால் விட்ட ராகுல்!!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 5 அக்டோபர் 2017 (17:58 IST)
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தொகுதியான உத்தரப் பிரதேச மாநிலம் அமேதிக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

 
 
அவரது தொகுதியில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என்று மக்களோடும் நேரடியாக உரையாடிவருகிறார் ராகுல் காந்தி. 
 
நேற்று நடந்த பேரணி ஒன்றில், மோடிக்கு எதிராக சவால் விடுத்துள்ளார். பேரணியில் ராகுல் காந்தி பின்வருமாறு கூறியுள்ளார். 
 
”நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தது மட்டுமல்ல, விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்களின் பிரச்சினை பற்றியும் பிரதமர் மோடி கவலைப்படவில்லை. 
 
விவசாயம் நலிவடைந்துவிட்டது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமை பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ளது. விவசாயிகள், இளைஞர்களின் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை என்பதை மோடி அரசு ஒப்புக்கொள்ள வேண்டும். 
 
காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது ஆறே மாதங்களில் விவசாயிகள், இளைஞர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என மோடிக்கு சவால் விடுத்துள்ளார் ராகுல் காந்தி.
 


இதில் மேலும் படிக்கவும் :