செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By ashok
Last Modified: சனி, 29 ஆகஸ்ட் 2015 (12:29 IST)

ஆண்களுடன் நிர்வாண பூஜை: ராதே மா மீது பெண் சீடர் புகார்

பிரபல மும்பை பெண் சாமியார் ராதே மா  நள்ளிரவில் ஆண்களுடன்  நிர்வாணம் பூஜை செய்ததாக அவரது பெண்  சீடர் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல மும்பை பெண் சாமியார் ராதே மா மீது பல்வேறு சர்ச்சைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தற்போது இவர் மீது மும்பையில் புகார் குவிந்து வருகிறது.

மும்பையைச்  சேர்ந்த பெண் ஒருவர் ராதே மாவுக்கு ஏதிராக வரதட்சணை  கொடுமை வழக்கு தொடர்ந்துள்ளா நிலையில் நிகி குப்தா என்ற இவருடைய சீடர் ஒருவரும் ராதே மா தன்னை துன்புறுத்தியதாக போலீசில் புகார் செய்துள்ளார். மதத்தின் பெயரை சொல்லி ராதே மா மும்பை மக்களை ஏமாற்றி வருவதாக மும்பை போரிவலியை சேர்ந்த சமூக ஆர்வலர் போலீசில் புகார் செய்துள்ளார். இதையடுத்து ராதே மா தலைமறைவாகி விட்டார்.

இந்நிலையில் கலர்ஸ் டி.வி. நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’ தொடரில் பங்கேற்று பிரபலமான டாலி பிந்த்ரா பெண் சாமியார் ராதே மா நள்ளிரவில் சத் சங் என்ற நிர்வாண பூஜை நிகழ்ச்சியை நடத்தி வருவதாகவும் இதில் தன்னை நிர்வாணப்படுத்தி நடனம் ஆட வைத்தார் என மும்பை காவல் துறையிடம்  புகார் கொடுத்துள்ளார். பிக் பாஸ் தொடரில் தோன்றியதன் மூலம் பிரபலமடைந்தவர் டாலி பிந்த்ரா. அரை டவுசர்-டி-ஷர்ட்டுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போஸ் கொடுத்து பிரபலமடைந்த இவர்  பெண் சாமியார் ராதே மாவின் தீவிர பக்தையாகவும்   இருந்துவந்தார் .

ராதே மா நள்ளிரவு நேரங்களில் சத் சங் நிகழச்சி ஒன்றை நடத்தி வந்துள்ளார் இந்த நிகழ்ச்சிக்கு பங்கேற்க தன்னை வற்புறுத்தியதாகவும் .அப்படி வந்தால் உனக்கு பிள்ளை வரம் அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில் சத் சங் நிகழ்ச்சிக்கு பங்கேற்க சென்ற டாலி பிந்த்ரா அந்த நிகழ்ச்சிக்கு சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது ஆபாசமான பார்ட்டி நிகழ்ச்சி என்று. இந்த நிகழ்ச்சியில் பலர் நிர்வாணமாக நடனமாடியபடி இருந்தனர்.அப்பொழுது , தன்னை நிர்வாணப்படுத்தி, பிறாருடன்  தகாத உறவு வைத்துக் கொள்ள அவர் தூண்டியதாகவும் மும்பை போலீசாரிடம் திடுக்கிடும்  புகார் தெரிவித்துள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சியி்ல் தனது கணவரையே அபகரிக்க முயன்றதாகவும் அந்தப் புகாரில் டாலி பிந்த்ரா குறிப்பிட்டுள்ளார்.

தற்போது போலீசில் நான் புகார் அளித்த பின் தினம்தோறும்  எனக்கு கொலை மிரட்டல் அதிகரித்து வருகிறது என்றும்,இவருக்கு மும்பையில் பிரபல தொழில் அதிபர்கள் உதவி செய்து வருகிறார்கள் என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.