Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சர்ச்சை சாமியார் ராதேமாவை மலர் தூவி வரவேற்ற காவல்துறையினர்

Radhe Maa
Abimukatheesh| Last Updated: வியாழன், 5 அக்டோபர் 2017 (14:34 IST)
டெல்லி விவேக் விகார் காவல் நிலையத்தில் பெண் சாமியார் ராதேமாவை காவல் துறையினர் மலர் தூவி வரவேற்று சிறப்பு மரியாதை வழங்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 
பெண் சாமியார் ராதேமா(46) மும்பை போரிவிலி பகுதியில் ஆசிரமம் வைத்து நடத்தி வருகிறார். இவர் மீது பெண் ஒருவர் காந்திவிலி காவல் நிலையத்தில் வரதட்சணை ஒடுமை புகார் அளித்துள்ளார். மும்பையில் இவருக்கு எதிராக இரு வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் டெல்லி விவேக் விகார் காவல் நிலையத்தில் ராதேமாவிற்கு மலர் தூவி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் சிறப்பு கண்காணிப்பாளர் இருக்கையில் அமர்ந்து பேசும் புகைப்படமும் வெளியாகி உள்ளது. ராதேமாவிற்கு காவல் நிலையத்தில் வழங்கப்பட்ட சிறப்பு கவனிப்பு கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
 
சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதேமாவிற்கு காவல்துறையினர் காவல் நிலையத்தில் மலர் தூவி வரவேற்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :