வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 10 நவம்பர் 2015 (13:49 IST)

கோஹினூர் வைரத்தை திரும்ப பெற இங்கிலாந்து ராணி மீது வழக்கு

பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட கோஹினூர் வைரத்தை திரும்ப பெற லண்டனிலுள்ள இந்திய வர்த்தகர்களும் நடிகர்களும் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.
 

 
பிரிட்டிஷ் ஆட்சியின் போது நமது நாட்டிலுள்ள எண்ணற்ற மதிப்பு மிக்க தங்க சிலைகள் வைரங்கள் உள்ளிட்ட செல்வங்கள் இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பபட்டன. இவற்றில் கோஹினூர் வைரமானது 800 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில் தோண்டி எடுக்கப்பட்டது.
 
தற்கால விலையில் மதிப்பிட முடியாத மிகவும் மதிப்பு வாய்ந்த வைரத்தை அன்றைய காலனிய ஆட்சியின்போது இங்கிலாந்து அரசிக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
தற்போது இந்த வைரத்தை மீண்டும் கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக லண்டனிலுள்ள சில இந்திய வர்த்தகர்களும் நடிகர்களும் இங்கிலாந்து அரசியின் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.
 
லண்டனிலுள்ள இந்தியர்களின் பொழுது போக்குவதற்கான டிட்டோஸ் என்ற அமைப்பின் நிறுவனர் டேவிட் டி சௌசா என்பவர் வழக்கிற்கான நிதி செலவை ஏற்க உள்ளார்.
 
இது தொடர்பாக சண்டே டெலிகிராப் என்ற அந்நாட்டு ஆங்கில பத்திரிகையில், "பொய்மையாக ஏற்படுத்தப்பட்ட சூழ்நிலைமைகளில் கோஹினூர் வைரமானது எடுத்து செல்லப்பட்டது.
 
காலனிய ஆட்சி இந்தியாவின் செல்வங்களை மட்டும் கொள்ளையடித்து செல்லவில்லை. அது இந்தியாவின் பெருமைக்குரிய மனதையும் அழித்துவிட்டது" என்று கூறியுள்ளது.