வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 13 அக்டோபர் 2015 (04:59 IST)

ஜெயலலிதாவுடன் சுயேச்சை எம்.எல்.ஏ. திடீர் சந்திப்பு

புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ. சிவக்குமார், தமிழக முதல்வர்  ஜெயலலிதாவை திடீரென சந்தித்தார்.
 
புதுச்சேரி சட்டப் பேரவையில் 30 உறுப்பினர்கள் உள்ளனர்.இதில், 15 எம்.எல்.ஏக்கள் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. மேலும், காரைக்கால் நிரவி தொகுதி சுயேச்சை எம்எல்ஏ சிவக்குமார் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்தார். இதனால், அவருக்கு, புதுச்சேரி அரசு சாராய வடிப்பாலை தலைவர் பதவியை வழங்கப்பட்டது.
 
இந்த நிலையில், புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ. சிவக்குமார், தமிழக முதல்வர்  ஜெயலலிதாவை திடீரென சென்னையில் சந்தித்து பேசினார். அப்போது, புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான புருஷோத்தமன் உடனிருந்தார்.
 
கடந்த 2011ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் அதிமுக உதவியோடு, என்.ஆர். காங்கிரஸ் கட்சி புதுச்சேரியில் ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில், புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ. சிவக்குமார் தமிழக முதல்வரை சந்தித்திருப்பது, புதுவை அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.