வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 22 செப்டம்பர் 2014 (19:46 IST)

தேநீரை தேசிய பானமாக அறிவிக்க பிரதமர் மோடிக்கு தேயிலை உற்பத்தியாளர்கள் கோரிக்கை

நாட்டின் முன்னணி தேயிலை உற்பத்தியாளர்கள் தேநீரை தேசிய பானமாக அறிவிக்க வேண்டும் என இன்று பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தினர்.
 
வடக்கு வங்காளத்தின் தேயிலை உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் பீகார் மற்றும் வடக்கு வங்காளத்தில் 100-க்கும் மேற்பட்ட தேயிலைத் தொழிற்சாலைகள் உள்ளன. இந்தத் தொழிற்சாலைகள் 100 மில்லியன் கிலோவிற்கும் அதிகமான தேயிலைத் தூளை உற்பத்தி செய்து வருகின்றன.
 
இந்நிலையில், தேயிலையின் ஆரோக்கியம் மற்றும் மலிவான விலையில் அனைவருக்கும் கிடைக்கும் பானமாக இருப்பதால் தேநீரை தேசிய பானமாக அறிவிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
 
அதில், ஆண்டுதோறும் உள்நாட்டில் தேயிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 3 சதவீதம் வரை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு வருடத்திற்கு இந்தியாவில் 1200 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தியாகிறது. அதில் 900 மில்லியன் கிலோ தேயிலை உள்நாட்டிலேயே பயன்படுத்தப்படுகிறது.
 
தேயிலையில் கலப்படம் செய்யாத வரை அது ஒரு இயற்கையான பானமே. அதில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியால் மற்ற எந்த பானங்களையும் விட அதிக ஆரோக்கியம் நிறைந்த பானமாக திகழ்கிறது.
 
ரயில்வே மற்றும் இராணுவத்துறைக்கு அடுத்தபடியாக கிராமங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இல்லாத இடங்களில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவது தேயிலை தோட்டங்கள்தான்.