Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சைக்கிளுக்கு மல்லுகட்டும் அப்பா- மகன்: தேர்தல் கமிஷன் வரை சென்ற பஞ்சாயத்து!!


Sugapriya Prakash| Last Modified புதன், 4 ஜனவரி 2017 (13:06 IST)
சமாஜ்வாதி கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ், அடுத்து கட்சி சின்னமான சைக்கிள் சின்னத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். 

 
 
அகிலேஷ் யாதவ் கட்சியின் செயற்குழுவை கூட்டி, தேசிய தலைவராக தன்னை அறிவித்துள்ளார். இதனால் அவரது தந்தையும், கட்சியின் நிறுவன தலைவருமான முலாயம்சிங் யாதவ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
 
இந்நிலையில், தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் சைக்கிள் சின்னம் தனது தலைமையிலான கட்சிக்கு உரியது என்று மனு கொடுத்துள்ளார்.
 
இதையடுத்து அதே போன்று ஒரு கோரிக்கை மனுவை தேர்தல் கமிஷனிடம் அகிலேஷ் தரப்பை சேர்ந்த நிர்வாகிகள் வழங்கினர். 
 
இரு தரப்பும் கட்சி சின்னம் கேட்டு மனு கொடுத்துள்ளதால், தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சைக்கிள் சின்னத்தை யாருக்கு கொடுப்பது என்பது பற்றி ஆலோசனை நடத்துவருகின்றனர்.
 
தேர்தல் கமிஷனால் ஒரு முடிவுக்கு வர முடியாத பட்சத்தில், சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னம் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :