Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ; 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு அதிகரிப்பு

Last Modified: ஞாயிறு, 25 டிசம்பர் 2016 (11:10 IST)

Widgets Magazine

ரூபாய் நோட்டு அறிவிப்பின் காரணமாக எழுந்துள்ள தட்டுப்பாட்டை சமாளிக்க 500 ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் அச்சடித்து பொதுமக்களுக்கு விநியோகிக்க மத்திய அரசு முயன்று வருகிறது.


 

 
மக்களிடம் உள்ள ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த மாதம் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், வங்கிகளிலும், ஏ.டி.எம் மையங்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்தான் மக்களுக்கு கிடைக்கிறது. 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இல்லாததால், சில்லரையும் கிடைப்பதில்லை.  இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 
 
மேலும், 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இல்லாததால் பெரும்பாலான ஏ.டி.எம் மையங்கள் மூடிக் கிடக்கின்றன. இதனால் பணம் எடுக்க வழியில்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 
 
எனவே, தற்போது 500 ரூபாய்  நோட்டுகளை அதிக அளவில் அச்சடிக்கும் பணியை முடிக்கிவிட்டுள்ளது மத்திய அரசு. மராட்டிய மாநிலம், நாசிக்கில் உள்ள அச்சகத்தில் ரூ.500 நோட்டுகள் அச்சடிப்பு 3 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால், தற்போது ஒரு நாளைக்கு 1 கோடி நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகிறது. 
 
அந்த ரூபாய் நோட்டுகள் விரைவில் மத்திய ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டு வங்கிகளுக்கு விநியோகிக்கப்படும் எனவும், இதனால் விரையில் பணத்தட்டுப்பாடு நீங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தமிழக என்ஜினியர் குத்திக் கொலை - பாரீஸில் பரபரப்பு

பாரீஸ் நகரத்தில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த என்ஜினியர் கத்தியால் குத்தி கொலை ...

news

இரண்டு நாட்களுக்கு பின் தமிழகத்தில் மழை - வானிலை மையம் அறிவிப்பு

தென் கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்னும் 2 நாட்களுக்கு ...

news

அன்பும் அமைதியும் நிலவட்டும் - தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து

உலகமெங்கும் இன்று கிறிஸ்துமஸ் பண்டைகை கொண்டாடப்படுவதால் பல்வேறு அரசியல் தலைவர்கள் இன்று ...

news

கிறிஸ்துமஸை முன்னிட்டு தமிழக மீனவர்கள் விடுதலை - இலங்கை அரசு அறிவிப்பு

நாளை உலகமெங்கும் கிறிஸ்துமஸ் திருவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு இலங்கை சிறையில் உள்ள ...

Widgets Magazine Widgets Magazine