பகலில் ஆரம்ப பள்ளி - இரவில் அழகிகளின் ஆபாச நடன மையம்


Murugan| Last Modified வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (16:04 IST)
உத்திரபிரதேசத்தில், ஆரம்ப பள்ளி ஒன்று இரவு நேரங்களில் அழகிகள் நடனமாடும் நடன மையமாக செயல்பட்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
உத்தரபிரதேச மாநிலத்தின் மிர்சாபூர் எனும் மாவட்டத்தில் உள்ள தெதாரியா எனும் கிராமத்தில் ஒரு அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளி இரவு நேரங்களில் அழகிகள் நடனமாடும் நடன மையமாக செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.
 
அதாவது, மாலை மாணவர்கள் சென்ற பின், இரவு நேரத்தில் அங்கு பலர் கூடுகிறார்கள். அங்கு அழகிகள் வரவழைக்கப்பட்டு நடன நிகழ்ச்சி நடைபெற்று வந்துள்ளது. அப்போது செல்போனில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ எப்படியோ வெளியாக, இந்த விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். இந்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :