செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 17 ஜூலை 2017 (05:15 IST)

ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு: பாமக அதிரடி முடிவு

இந்திய ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் நாடு முழுவதிலும் உள்ள எம்பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உள்ளனர். தமிழகத்தில் 37 அதிமுக எம்பிக்கள், ஒரு பாஜக எம்பி மற்றும் ஒரு பாமக எமி உள்ளனர். மேலும் ஆர்.கே.நகர்  தொகுதி தவிர 233 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 



 
 
இந்த நிலையில் ஒரே ஒரு எம்பியை வைத்துள்ள பாமக, ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. எனவே தர்மபுரி எம்பியான அன்புமணி ராமதாஸ் இன்று வாக்களிக்க மாட்டார்
 
எங்களுடைய கோரிக்கைகளை இருதரப்பினர்களும் ஏற்காததால் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் துணை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்கு என்பது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.