1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 21 ஏப்ரல் 2016 (16:15 IST)

உத்தரகாண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து

உத்தரகாண்டில் தற்போது நடந்து வரும் குடியசுத் தலைவர் ஆட்சி சட்டத்துக்கு புறம்பானது என கூறி அம்மாநில உயர் நீதிமன்றம் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்துள்ளது.


 
 
உத்திரகாண்ட் முதல்வராக இருந்த ஹரீஷ் ராவத் உத்திரகாண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் இல்லாமல் உத்தரகாண்டில் அமல்படுத்தப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி சட்டத்துக்கு புறம்பானது என கூறி அதனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.
 
மேலும் வரும் 29-ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையை கூட்டி நம்பிக்கை வக்கெடுப்பு நடத்தவும் அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.