வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 24 செப்டம்பர் 2015 (18:54 IST)

காசோலை திரும்பி வந்தால் உடனடியாக வழக்கு - அவசர சட்டம்

காசோலை திரும்பி வந்தால் உடனடியாக வழக்கு பதிவு செய்வதற்கு வசதியாக அவசரச் சட்டம் ஒன்றை குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ளார்.
 

 
இது தொடர்பாக புதன்கிழமை அன்று புதுடெல்லியில் வெளியிடப்பட்டுள்ள மத்திய அரசின் செய்தி குறிப்பில், காசோலையை பயன்படுத்தி வங்கியில் பணம் இல்லாத காரணத்தினால் திரும்பி வருகிறது.
 
இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அவசரச்சட்டத்தினை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார்.
 
இது கடந்த மூன்று மாதத்திற்குள் பிறப்பிக்கும் இரண்டாவது உத்தரவு ஆகும். இதற்கு முன்னதாக கடந்த ஜூன் 15ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
 
மாற்று முறை ஆவணங்கள் சட்டம் என்றழைக்கப்படும் இச்சட்டத்தின்படி காசோலை பெறுபவரின் இடத்திலேயே வழக்கு தொடர முடியும்.
 
மாற்று முறை சட்டம் 2015ஆம் ஆண்டிற்கான அவசரச்சட்டம் கடந்த செவ்வாயன்று குடியரசுத் தலைவரினால் கையெழுத்திடப்பட்டு அமலுக்கு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
 
காசோலை திரும்பிவருவதால் நாடு முழுவதும் 18 லட்சம் பேர் பாதிக்கப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.