Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கொட்டும் மழையிலும் குடையை மறுத்த குடியரசு தலைவர்


sivalingam| Last Modified திங்கள், 9 அக்டோபர் 2017 (07:03 IST)
இந்தியாவின் முதல் குடிமகன் என்ற வகையில் குடியரசு தலைவருக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் கொட்டும் மழையில் குடையை கூட ஏற்காமல் ராணுவ வீரர்களின் அணிவகுப்பை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் ஏற்றுக்கொண்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.


 
 
கேரள தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விமானப்படையின் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட போது திடீரென மழை பெய்தது.
 
அப்போது குடியரசு தலைவரின் உதவியாளர்கள் குடையை கொண்டு வந்தபோது, அவர் அதை மறுத்துவிட்டார். ராணுவ வீரர்கள் மழையில் நனைந்து அணிவகுப்பில் ஈடுபட்டிருக்கும் நிலையில் தானும் மழையில் நனைந்தபடியே அதனை ஏற்பதுதான்முறை என கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்


இதில் மேலும் படிக்கவும் :