Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

குடியரசுத்தலைவர் பலப்பரிட்சை: தொடங்கியது வாக்குப்பதிவு!

குடியரசுத்தலைவர் பலப்பரிட்சை: தொடங்கியது வாக்குப்பதிவு!


Caston| Last Updated: திங்கள், 17 ஜூலை 2017 (10:45 IST)
நாட்டின் 14-வது ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்கும் ஜனதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தேர்தலில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர்.

 
 
இந்த தேர்தல் களத்தில் சார்பில் ராம்நாத் கோவிந்தும் காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக மீராகுமாரும் களத்தில் குதித்துள்ளனர். இந்த வாக்குப்பதிவானது இன்று நாடாளுமன்றத்திலும் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலகத்திலும் நடைபெறும்.
 
இதில் நாடு முழுவதும் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் என மொத்தம் 4896 பேர் வாக்களிக்கின்றனர். இதில் வாக்களிக்கும் எம்பி, எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
 
இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு வரை நடைபெறும். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப் பெட்டிகள் அனைத்தும் பாதுகாப்புடன் டெல்லிக்குக் கொண்டு செல்லப்படும்.


இதில் மேலும் படிக்கவும் :