வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2016 (10:22 IST)

இறந்த மாட்டை அகற்ற மறுத்ததால் தலித் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கொடூரர்கள்!

இறந்த மாட்டை அகற்ற மறுத்ததால் தலித் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கொடூரர்கள்!

குஜராத் மாநிலத்தில் இறந்து போன பசு மாடு ஒன்றை அகற்ற மறுத்த குடும்பத்தினரை தாக்கி, அந்த வீட்டில் உள்ள 5 மாத கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.


 
 
பனஸ்கந்தா மாவட்டம் மோட்டா கார்கா கிராமத்தில் பசுமாடு ஒன்று இறந்துள்ளது. இதனையடுத்து அதனை அகற்ற தாக்கூர் சாதியை சேர்ந்த ஒரு கும்பல் அங்குள்ள தலித் குடும்பத்திடம் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் அந்த தொழிலை விட்டு நீண்ட நாட்கள் ஆகிறது என மறுத்துள்ளனர்.
 
மேலும், குஜராத்தில் 4 தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து இனி செத்த மாட்டின் தோலை உரிப்பதில்லை என தலித் பிரிவினர் உறுதியெடுத்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இறந்த பசுமாட்டை அகற்ற மாட்டோம் என அந்த தலித் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
 
இதனால் கோபமடைந்த தாக்கூர் சாதியை சேர்ந்த அந்த கும்பல், அவர்களை ஆபாசமாக திட்டி அவர்களை தாக்க ஆரம்பித்தவர்கள் அந்த வீட்டில் இருந்த 5 மாத கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் காலால் எட்டி உதைத்துள்ளனர்.
 
இதனால் பலத்த காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு இல்லை என கூறினார். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர்.