Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மோடியின் வாக்குறுதிகளை கலாய்த்த: பிரகாஷ்ராஜ்

Last Updated: திங்கள், 5 பிப்ரவரி 2018 (18:30 IST)

கர்நாடக மாநிலத்தில் பிரதமர் மோடி அளித்த தேர்தல் வாக்குறுதிகளை டுவிட்டரில் கலாய்த்து பதிவிட்டார் பிரகாஷ்ராஜ்.
 
தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்தவர் பிரகாஷ்ராஜ். தனது வித்தியசமான நடிப்பின் முலம் அனைத்து மொழி மக்களின் மனதை கவர்ந்தவர் . இவர் சமீபகாலமாக பிரதமர், பாஜக அமைச்சர்கள், நிர்வாகிகள் என அனைவரையும் விமர்சித்து வருகிறார்.
 
கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தல் பொதுகூட்டத்தில் பங்கேற்று மோடி அளித்த வாக்குறுதியாவது "17,000 கோடி ரூபாயில் 160 கி.மீ தூரத்துக்கு புறநகர் ரயில் சேவை அமைக்கப்படும்” என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்தார்.
 
இந்த வாக்குறுதிகளை கேலி செய்யும் விதமாக பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், 2014-ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளாக விற்கப்பட்ட ப்ராமிஸ் டூத் பேஸ்ட் என்னவாயிற்று? விவசாயிகள் மற்றும் வேலையில்லா பட்டதாரிகளின் முகத்தில் சிரிப்பை கொண்டு வர முடியவில்லை. நேற்று கர்நாடகா பொதுக் கூட்டத்தில் ப்ராமிஸ் டூத் பேஸ்ட் விற்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் சிரிப்பை கொண்டுவருமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :