செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2015 (16:57 IST)

மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசிடம் கர்நாடகா அனுமதி கோரவில்லை - அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசிடம் கர்நாடக அரசு அனுமதி கோரவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.  
 
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. கர்நாடகா அணை கட்டினால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலுமான பாதிக்கப்படும் என்று கூறி தமிழகத்தில் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதனிடையே, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்டுவதைத் தடுக்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என்றும், புதிய அணை கட்டுவதில் உறுதியாக இருக்கிறோம் என்றும், அணைக் கட்டும் முடிவில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் கர்நாடக முதல்வர் சித்தாரமையா நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் உறுதிபட தெரிவித்தார்.
 
இந்நிலையில், மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் செய்தியாளர்கள் இன்று கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர், அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு இதுவரை எந்த அனுமதியும் கோரவில்லை என்றும், விண்ணப்பம் வந்தால் பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறினார்.