1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bala
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2015 (15:03 IST)

கடை ஊழியரை கடுமையாக தாக்கிய பிரபல நடிகை- வீடியோ

டெல்லியில் கடை ஊழியர் ஒருவரை கடுமையாகத் தாக்கி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் நடிகை பூஜா மிஸ்ரா.


 

டெல்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இந்தி நடிகை பூஜா மிஸ்ரா ஷாப்பிங் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கடை ஊழியர் ஒருவர், தன்னை கிண்டல் செய்தார் என்று கூறி, அந்த இளைஞரை கடுமையாகத் திட்டி அடித்து, தாக்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து போலீஸார் கூறுகையில், கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஒருவேலை இது பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக நடந்த படப்பிடிப்பா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றுவருகிறது. ஆனாலும் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர்.

இதற்கு முன்பு நடிகை பூஜா மிஸ்ரா தனியார் ஹோட்டல் ஊழியர் ஒருவர் மீது தாக்கிய  வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடுமையான எதிர்ப்புகளை எழுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.