Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விவசாயிகள் போராட்டம் இன்று முடிவுக்கு வரும்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை


sivalingam| Last Modified புதன், 12 ஏப்ரல் 2017 (05:50 IST)
வங்கிக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு மாதமாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களை அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சந்தித்தனர்.


 


இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 'விவசாயிகள் போராட்டம் உணர்வுபூர்வமானது. போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தேன். மத்திய அரசு மீது விவசாயிகள் நம்பிக்கை வைக்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கை மனுவை பிரதமரிடம் கொண்டு சென்று தகுந்த நடவடிக்கை எடுப்பேன். இதனால் இந்த போராட்டம் இன்றுடன் முடியும் என்று நம்புகிறேன்' என்று கூறினார்

ஆனால் விவசாயிகள் தாங்களே நேரடியாக பிரதமரை சந்திக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் மீண்டும் ஜந்தர்மந்தரில் போராட்டம் தொடரும் என்று விவசாயி அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :